உங்கள் பாஸை விரும்புபவரா நீங்கள்ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வராத தன்னுடைய பாஸுக்கு ஃபோன் செய்கிறார் ஒருவர்...
எதிர் முனையில் அந்த அதிகாரியின் மனைவி,தன்னுடைய கணவர் இறந்து ஒருவாரம் ஆகிவிட்டதாக தெரிவிக்கிறார்.
மறுபடியும் இவர் ஃபோன் செய்ய அவர் மறுபடியும் ,உங்கள் பாஸ் இறந்து ஒரு வாரம் ஆகி விட்டதாக தெரிவிக்கிறார்.
மீண்டும் இவர் ஃபோன் செய்ய அவரோ சற்று கடுப்புடன் நான் தான் ஏற்கனவே கூறினேன் அல்லவா...அவர் இறந்து ஒரு வாரம் ஆகி விட்டது என்று தொடர்பை துண்டித்துவிட்டார்.
மீண்டும் இவர் அழைக்க...அவர் கோபத்துடன் கத்த..இவரோ அமைதியாக..இந்த செய்தியை மீண்டும் மீண்டும் கேட்கவே தான் ஃபோன் செய்ததாக கூறினார்.
:)