கடவுளே கடவுளே....

கடவுளே கடவுளே....



அப்ப கடவுள் இந்த அண்ட சராசரத்த எல்லாம் படச்சிட்டு இருந்த

நேரம்..அங்க இருந்த அவரோட தேவதூதர்கள்கிட்ட..என்னோட

படைப்புகள் எல்லாமே ஒரு பேலன்ஸா இருக்கனும்..அதாவது 10

மான்கள் இருந்ததுன்னா 10 சிங்கம் இருக்கனும்..இந்த மாதிரி

கரெக்ட்டா ஃபாலோ பண்ணனும் அப்படிங்குறார்..



அவர் அந்த ஏஞ்சல்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு..இங்க

பாருங்க...இதுதான் அமெரிக்கா.இவங்களுக்கு நிறைய செல்வத்தையும்

பலத்தையும் கொடுத்தேன்..ஆனால் அதே நேரத்துல அவங்களுக்கு

பாதுகாப்பு,நிம்மதிய கொறச்சுட்டேன்..


இத பாருங்க இதுதான் ஆப்ரிக்கா...இங்க அழகான

இடங்களையும்,இயற்கை வளத்தையும் கொடுத்திருக்கிறேன்..ஆனா அதே

இயற்கையால அவங்களுக்கு ஆபத்தையும் கொடுத்திருக்கேன்..


இதுதான் தெனமெரிக்கா..இங்க நெறைய காடுகளை படச்சிருக்கேன்..

இங்க நிலப்பாரப்பு கம்மிங்கிறதுனால அவங்களே அத எல்லாம்

வெட்டிடுவாங்க..இதே மாதிரி எல்லாத்துக்கும் பேலன்ஸ் வச்சி கிரியேட்

பண்ணானுங்குறாரு..

அப்ப ஒரு ஏஞ்சல் கேட்டது..கடவுளே உங்களுக்கு ரொம்ப புடிச்ச நாடு


எதுன்னு?


அவர் சொன்னாரு..என்னோட படைப்பிலேயே எனக்கு புடிச்ச இடம்


அப்புறம் சிறந்தது இந்தியா தான்னு சொன்னாரு..

அழகான ஆறுகளும்,மலைகளும்,நதிகளும்..பலப்பல இயற்கை


வளங்களும் இங்கதான் ஒன்னா இருக்குன்னாரு..

இங்க இருக்கிற மக்கள் புத்திசாலிகளாவும் இருக்கிறர்கள்..


ஏஞ்சல்ஸ்க்கு எல்லாம் ஆச்சரியம்..அப்ப நீங்க சொன்ன பேலன்ஸ்


மேட்டர் என்னாச்சுன்னு கேட்டாங்க..

கடவுள் சொன்னார்..இதுக்கு எல்லாம் பேலன்ஸா அவங்களுக்கு


எல்லாருக்கும் நெறைய பக்கத்து வீட்டுக்காரங்களையும்,

சொந்தக்காரங்களையும் படச்சிருக்கேன்னாரு..







பாஸ்......

படத்த பார்த்தா புரியும்னு நெனக்கிறேன்..

எங்க ஆஃபிஸ்ல இந்த அளவுக்கு இல்ல..உங்களுக்கு...