இந்தியன் இந்தியந்தான்



அமெரிக்காவுல இருந்து ஒருத்தர் இந்தியாவ சுத்திப்பார்க்க

வந்தார்.அவரு ஒரு இந்தியரை கைடா வச்சுக்கிட்டு சுத்திப்பார்க்க

கெளம்புனாரு.மொதல்ல தாஜ்மகாலுக்கு போனாங்க..நம்ம ஆளு நல்லா

எக்ஸ்பிலைன் பண்ணீ சுத்திக்காண்பிச்சார்..அப்புறம் அந்த அமெரிக்கர்

கேட்டாரு இத கட்டி முடிக்க எவ்ளோ நாள் ஆச்சுன்னு..?அதுக்கு நம்ம ஆளு

20 வருஷம் ஆச்சுன்னு சொன்னார்..

உடனே அவ்ரு இருபதுதுதுது.....வருஷமா ஆஆஆஆச்சுன்னு

சொல்லிட்டு(நம்ம என்னத்த கண்ணையா வடிவேலு கிட்ட சொன்ன

மாதிரி )..எங்க ஆமெரிக்காவுலன்னா இந்த தாஜ்மகால 10 வருஷத்தில

கட்டி முடிச்சிருப்பாங்கன்னாரு..

அடுத்த நாள் ராஜஸ்தான்ல இருக்கிற ஹவா மாகாலுக்கு

போனாங்க.அப்பவும் அவரு அதே கேள்வியை கேட்டாரு..நம்ம ஆளு 10

வருஷம் அப்படின்னார்..அதுக்கு அவரு எங்க ஆமெரிக்காவுலன்னா 5

வருஷத்தில கட்டி முடிச்சிருப்பாங்கன்னாரு..

நம்ம ஆளுக்கு புரிஞ்சி போச்சு ...அவரு அமெரிக்கா புத்திய

காட்ட ஆரம்பிச்சிட்டாருன்னு..அடுத்த நாள் குதுப்மினாருக்கு போனாங்க..அந்த

அமெரிக்கர் கொஸ்டீன் கேக்கறதுக்கு முன்னாடியே நம்ம ஆளு

அவருக்கிட்ட..என்னடா ஆச்சரியமா இருக்கு..ரெண்டு நாள் முன்னாடி வந்தப்ப

இந்த கோபுரம் இங்க இல்ல...அதுக்குள்ள கட்டிட்டாங்களா???!!!!!அப்டின்னு

சொல்லிட்டாரு..

இது எப்படி இருக்கு ...