ஆ(அ)ப்புரைசல்
ஆ(அ)ப்புரைசல் :
ஒருத்தர் கனவுல எமதர்மராஜா வந்து..உனக்கு இன்னும் 10
மாசத்துக்கு எதுவுமே ஆகாது..உன்னோட ஆயுசு கெட்டி..அதானால எங்க
வேணும்னாலும் போ...என்ன வேணும்னாலும் பண்ணு..அப்டின்னுட்டார்...
இவருக்கு ஒரே சந்தோஷம்..இருக்க முடியல..அந்த நிமிஷத்தில்
இருந்து ஊர் சுத்த ஆரம்பிச்சாரு....ஒரே தண்ணியில மெதந்தாரு..அப்படியே
ஊர் சுத்துரப்போ ஆக்ஸிடன்ட் ஆய் டப்புன்னு செத்துபோய்ட்டாரு..
எமலோகம் போனப்புறம்..எமதர்மராஜக்கிட்ட போய் நியாயம் கேட்டாரு
நம்ம ரஜினிகாந்த் கேட்டாப்புல..
அப்ப நம்ம எமதர்மராஜா சொல்றாரு..கோவிச்சுக்காதப்பா..சொல்லாம
கொள்ளாம திடீர்னு அப்புரைசல் போட்டுட்டாங்க..அதான் கொஞ்சம்
அர்ஜண்ட்டா கணக்க முடிக்க வேண்டியதா போச்சு..
.
.
.
.
.
....இது எப்டி இருக்கு
எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்...இல்லன்னா?
எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்...இல்லன்னா?
3 பசங்க எக்ஸாமுக்கு முந்துன நாள் நல்லா ஆட்டம் போட்டுட்டு
ஒண்ணுமே படிக்காம எழுத வந்தாங்க...நேரா ஹெட் மாஸ்டர் கிட்ட
போய்..நேத்து ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வரும் போது கார் வழியில
பங்சர் ஆய்டுச்சு சார்..அதனால எங்களால சரியான நேரத்துக்கு வீட்டுக்கு
வந்து படிக்க முடியல சார்..அப்படின்னு கண்ணீர் உட்டானுங்க...அவரும் அத
நம்ம்ம்..பி சரி பசங்களா..உங்க 3 பேருக்கு மட்டும் நாளைக்கு ரிஎக்ஸாம்
அப்படின்னு சொல்லிட்டாரு..
இவனுங்களுக்கு கொண்டாட்டம் தாங்க முடியல...
அடுத்த நாள்..3 பேரும் எக்ஸாம் எழுத வந்தாங்க..அப்ப ஹெட் மாஸ்டர்
அவங்க கிட்ட ..நீங்க எக்ஸாம் எழுத ஒரு கன்டிசன்..3 பேரும் தனி தனி
ரூம்ல உட்கார்ந்து எழுதனும்,ரெண்டே ரெண்டு கொஸ்டீன் தான்
அப்டீன்னாரு...
நம்மாளுங்களுக்கு ஒரே குஷி...ஒ.கே சார் அப்டின்னு கோரஸா
சொன்னாங்க..அதே மாதிரி போய் எழுத உட்கார்ந்தாங்க...கொஸ்டீன் பேப்பர
வங்கி பார்த்தா....
அதுல இருந்த கொஸ்டீன்ஸ் இதுதான்..
1. உங்கள் பெயர் :................(2 மார்க்)
2. உங்கள் காரில் எந்த டயர் பங்சர்.........(98 மார்க்)
அ)வலது முன் டயர்
ஆ)இடது முன் டயர்
இ)வலது பின் டயர்
ஈ)இடது பின் டயர்
.
.
.
...........இதுக்குதான் எதையுமே பிளன் பண்ணி பண்ணனும்...
Subscribe to:
Posts (Atom)