கவனம் தேவை

கவனம் தேவை :



ஒரு வெர்ட்னரி மருத்துவக்கல்லூரியின் முதலாம் ஆண்டு செய்முறை

வகுப்பு...ஒரு வயதான ப்ரொஃபசர் வகுப்பெடுக்க வந்தார்..அந்த அறையில் ஒரு

டேபிளின் மேல் ஒரு இறந்த பன்றியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.



வகுப்பினை ஆரம்பித்த அவர் மாணவர்களிடம் செய்முறை வகுப்பில்

மிக்க கவனம் தேவை..ஒவ்வரு நொடியும் இன்றியமையாதது..அதனை நீங்கள்

தவற விடக் கூடாது..இப்போது நான் என்ன செய்கிறேனோ அதையே நீங்களும்

செய்ய வேண்டும்..மிக்க கவனம் தேவை என்று கூறியவாறே..



தனது ஒரு விரலினை அந்த பன்றியின் வாயில் விட்டு எடுத்து தனது

வாயில் வைத்து சுவைத்தார்..மாணவர்களுக்கு என்ன செய்வதென்று

விளங்கவில்லை..ஆனால் புரொஃபசர் சொல்லி விட்டாரே என்று அவர்களும்

அதே போன்று செய்தனர்..



இதே போன்று அவர் பல முறை செய்ய மாணவர்களும் அதையே

செய்தனர்..இறுதியாக அவர் மாணவர்களிடம் நான் செய்ததை நீங்களும்

செய்தீர்கள் அல்லவா?...என்று கேட்டார்..அவர்களும் ஆமாம் என்றனர்..


அதற்கு அவர் இல்லை நான் செய்தது போன்று நீங்கள் செய்ய வில்லை

என்று கூறினார்..மாணவர்கள் விழிக்க...அவர் தொடர்ந்தார்...நான் பன்றியின்

வாயில் விட்டது ஒரு விரல்...என் வாயில் வைத்தது மற்றொரு விரல்...ஆகவே

நான் முதலில் கூறியபடி மிக்க கவனம் தேவை..என்று முடித்தார்...