யாரு புத்திசாலி .....கலாமா இல்ல ஜார்ஜ் புஷ்ஷா?

ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தப்ப நம்ம குடியரசு தலைவர் கலாமை சந்திக்கிறார் ...

அப்ப கலாம் கிட்ட கேக்குறாரு ...எப்படி நீங்க இவ்ளோ திறமையா மேனாஜ் பண்றீங்க அப்டீன்னு கேட்டாரு ....

அதுக்கு கலாம் ...என்ன சுத்தி எப்பவும் திறமையானவர்களா வச்சிக்கிருவேன்னு சொன்னாரு ,,,,


எப்பிடி அவங்க இண்டேல்லிஜென்ட் அப்டின்னு கண்டு பிடிப்பீங்கன்னு புஷ் கேட்டாரு ...உடனே கலாம் இப்ப பாருங்க அப்டீன்னு மன்மோகன் சிங்குக்கு போன் பண்ணுனாரு ...

போன் பண்ணி கேட்டாரு மிஸ்டர் சிங் ...உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு பையன் ...அவர் உங்க அண்ணனும் இல்ல தம்பியும் இல்ல ...அவர் யாருன்னு கேட்டாரு ....


உடனே சிங் அது நான் தான்னு சொல்லிட்டாரு..
இவ்ளோ தான்னு ....கலாம் சொல்லிட்டாரு ...


உடனே புஷ் ரொம்ப நன்றி ...நானும் இத பின்னாடி யூஸ் பண்ணிக்கிறேன் அப்டின்னுட்டு போய்ட்டாரு ...


அமெரிக்கா வந்த ஒடனே புஷ் , காண்டலிசா (இவங்க அப்போ ஸ்டேட் செகரட்ரி) கிட்ட என்னோட கொஸ்டினுக்கு அன்செர் பண்ணுங்க ....பண்ணிட்டா எனக்கு ரொம்ப சந்தோசம் அப்டின்னாரு ......


அவங்களும் ஒ. கே மிஸ்டர் பிரெசிடென்ட் அப்டின்னு சொல்லிட்டாங்க ..
இவர் அப்டியே கலாம் சொன்ன கேள்விய கேட்டாரு ...அவங்க யோசிச்சுட்டு எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் பதில் சொல்றேன்னு சொல்லிட்டாங்க ..


அவங்களும் ரொம்ப ட்ரை பண்ணிட்டு கடைசில எல்லா செனடர்ஸ் வர சொல்லி ஒரு மீட்டிங் போட்டாங்க ...ஆனா யாருக்கும் பதில் தெரியல ...அப்புறம் அவங்க காலின் பவல் (டிபான்ஸ் ) கிட்ட கேக்குறாங்க ...

உடனே அவர் அது நான் தான்னு கரக்ட்டா சொல்லிட்டாரு ...
உடனே இந்த அம்மாவுக்கு நிம்மதி ...


இவங்க புஷ் கிட்ட போய்...எனக்கு பதில் தெரியும் சார்...அப்டின்னாங்க ...

அவருக்கு ரொம்ப சந்தோசம் ...சொல்லுங்க செனடர் அப்டின்னாரு ..

உடனே இந்த அம்மா அது காலின் பவல் தான் அதுன்னுச்சு ...

அதுக்கு புஷ் ..இல்ல அது தப்பு ...அது வந்து மிஸ்டர் . மன்மோகன் சிங் தான் அப்படின்னாராம் ...

இது அப்புடி இருக்கு ....