தமிழன் தமிழந்தான்


மைக்ரோசாஃப்ட்ன் ஐரோப்பா கிளைக்கான சேர்மன் போஸ்டிற்க்கான நேர்முக தேர்வுக்கு நம்ம ஊர் ராமசாமி போயிருந்தாரு.பில்கேட்ஸ் தான் இன்டெர்வியூ பண்றாரு.

மொத்தம் 5000 பேர் இருந்தாங்க.

மொதல்ல அவரு யாருக்கெல்லாம் ஜாவா தெரியாதோ அவங்க எல்லாம் கெளம்பலாம் அப்டின்னு சொல்லிட்டாரு...ஒரு 2000 பேர் கெளம்பிட்டாங்க.

ராமசாமி யோசிச்சாரு...நமக்கு ஜாவா தெரியாது...இப்ப இங்க இருந்தாலும் ஒன்னும் இல்ல .வெளிய போனாலும் ஒன்னும் இல்ல...இருந்து என்ன தான் நடக்குன்னு பாப்போமேன்னு இருந்துட்டாரு..


அடுத்து பில்கேட்ஸ்,யாருக்கெல்லாம் 100 பேர வச்சு மேனேஜ் பண்ண முடியாதோ அவ்ங்க எல்லாம் கெளம்பலாம்னு சொல்லிட்டாரு..


அடுத்து ஒரு 2000 பேரு கெளம்பிட்டாங்க..நம்மாளு யோசிச்சாரு..நாம ஒருத்தன கூட மேனேஜ் பண்ணுனது கெடயாது..என்ன பண்ண ..என்ன தான் நடக்குன்னு பார்க்கலாம்னு உக்கார்ந்துட்டாரு..

அப்புறம் யாரெல்லாம் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் முடிக்கலியோ அவங்க எல்லம் நடய கட்டுங்கன்னு சொல்லிட்டாரு..ஒரு 500 பேரு கெளம்பிட்டாங்க..

இவரு அப்பவும் உக்கார்ந்துட்டு இருந்தாரு..

கடைசியா பில்கேட்ஸ், யாருக்கெல்லாம் செர்பொ‍‍ கிரெட் பேச தெரியுமோ அவங்க மட்டும் இருங்கன்னாரு.அப்புறம் நம்ம ஆளும் இன்னும் ஒருத்தர் மட்டும் இருந்தாங்க..

பில்கேட்ஸ் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் நீங்க ரெண்டு பேரும் செர்பொ‍‍ கிரெட்ல பேசுங்கன்னாரு..

உடனே ராமசாமி பக்கத்துல இருந்த்வர்கிட்ட எந்த ஊருன்னு கேட்டாரு..

அவரு ஒடனே நமக்கு தூத்துக்குடி பக்கம் அப்டின்னாரு..




your@email.com
http://www.

ராங் மெயில்




வெளியூர் வந்த கணவன் தான் தங்கி இருந்த ஹோட்டலில் கணிணி இருப்ப்தை அறிந்து தன் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தான்.

ஆனால் முகவரியை தவறாக அடித்து அனுப்பி விடுகிறான், அதை அவன் கவனிக்கவில்லை.


அதே ஊரில் ஒரு பெண்மணி தன்னுடைய கணவரின் இறுதி சடங்க முடித்து விட்டு வீடு திரும்பினாள். தனக்கு தன்னுடைய உறவினர்கள் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பி இருப்பார்கள் என நினைத்து மெயில் செக் அப் செய்வதற்காக கண்ணியின் முன்பு அமர்ந்தாள்.

தனக்கு வ்ந்த முதல் செய்தியை படிக்கிறாள்..

என் இனிய மனைவிக்கு,

இனிதாய் வந்து சேர்ந்தேன்


எனது இந்த மெயில் உனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.இங்கு எனக்கு கம்ப்யூட்டர் வழங்கி உள்ளார்கள்.இங்கு இருப்பவர்கள் அனைவரும் தங்களுடைய மனைவிக்கும் சொந்தங்களுக்கும் செய்தி அனுப்புவதற்காக..நீ நாளை இங்கு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்..உன் வருகக்காக காத்திருக்கிறேன்..


இப்படிக்கு,
அன்பான உன் வாழ்க்கை துணைவன்