ராங் மெயில்




வெளியூர் வந்த கணவன் தான் தங்கி இருந்த ஹோட்டலில் கணிணி இருப்ப்தை அறிந்து தன் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தான்.

ஆனால் முகவரியை தவறாக அடித்து அனுப்பி விடுகிறான், அதை அவன் கவனிக்கவில்லை.


அதே ஊரில் ஒரு பெண்மணி தன்னுடைய கணவரின் இறுதி சடங்க முடித்து விட்டு வீடு திரும்பினாள். தனக்கு தன்னுடைய உறவினர்கள் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பி இருப்பார்கள் என நினைத்து மெயில் செக் அப் செய்வதற்காக கண்ணியின் முன்பு அமர்ந்தாள்.

தனக்கு வ்ந்த முதல் செய்தியை படிக்கிறாள்..

என் இனிய மனைவிக்கு,

இனிதாய் வந்து சேர்ந்தேன்


எனது இந்த மெயில் உனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.இங்கு எனக்கு கம்ப்யூட்டர் வழங்கி உள்ளார்கள்.இங்கு இருப்பவர்கள் அனைவரும் தங்களுடைய மனைவிக்கும் சொந்தங்களுக்கும் செய்தி அனுப்புவதற்காக..நீ நாளை இங்கு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்..உன் வருகக்காக காத்திருக்கிறேன்..


இப்படிக்கு,
அன்பான உன் வாழ்க்கை துணைவன்

1 comment:

ஏதாவது சொல்லுங்கப்பா