எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்...இல்லன்னா?



எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்...இல்லன்னா?


3 பசங்க எக்ஸாமுக்கு முந்துன நாள் நல்லா ஆட்டம் போட்டுட்டு

ஒண்ணுமே படிக்காம எழுத வந்தாங்க...நேரா ஹெட் மாஸ்டர் கிட்ட

போய்..நேத்து ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வரும் போது கார் வழியில

பங்சர் ஆய்டுச்சு சார்..அதனால எங்களால சரியான நேரத்துக்கு வீட்டுக்கு

வந்து படிக்க முடியல சார்..அப்படின்னு கண்ணீர் உட்டானுங்க...அவரும் அத

நம்ம்ம்..பி சரி பசங்களா..உங்க 3 பேருக்கு மட்டும் நாளைக்கு ரி‍எக்ஸாம்

அப்படின்னு சொல்லிட்டாரு..


இவனுங்களுக்கு கொண்டாட்டம் தாங்க முடியல...

அடுத்த நாள்..3 பேரும் எக்ஸாம் எழுத வந்தாங்க..அப்ப ஹெட் மாஸ்டர்

அவங்க கிட்ட ..நீங்க எக்ஸாம் எழுத ஒரு கன்டிசன்..3 பேரும் தனி தனி

ரூம்ல உட்கார்ந்து எழுதனும்,ரெண்டே ரெண்டு கொஸ்டீன் தான்

அப்டீன்னாரு...


ந‌ம்மாளுங்க‌ளுக்கு ஒரே குஷி...ஒ.கே சார் அப்டின்னு கோர‌ஸா

சொன்னாங்க‌..அதே மாதிரி போய் எழுத‌ உட்கார்ந்தாங்க‌...கொஸ்டீன் பேப்ப‌ர‌

வ‌ங்கி பார்த்தா....


அதுல‌ இருந்த‌ கொஸ்டீன்ஸ் இதுதான்..

1. உங்க‌ள் பெய‌ர் :................(2 மார்க்)

2. உங்க‌ள் காரில் எந்த‌ ட‌ய‌ர் ப‌ங்ச‌ர்.........(98 மார்க்)
அ)வலது முன் ட‌ய‌ர்
ஆ)இட‌து முன் ட‌ய‌ர்
இ)வ‌ல‌து பின் ட‌ய‌ர்
ஈ)இட‌து பின் ட‌ய‌ர்
.

.
.

...........இதுக்குதான் எதையுமே பிளன் பண்ணி பண்ணனும்...

3 comments:

  1. செமயா மாட்டுனானுவலா....

    ReplyDelete
  2. Arnold:

    அத ஏன் கேக்குறீங்க..இதே மாதிரி எனக்கும் அனுபவம் இருக்கு

    ReplyDelete
  3. அவருக்கும் முன் அனுபவம் போல..

    ReplyDelete

ஏதாவது சொல்லுங்கப்பா