நினைவில் வைக்க
" பெண்ணை மறக்க எப்போது கற்றுகொள்கிராயோ,அப்போதுதான் உன்னை நினைக்க கற்றுகொள்வாய் "
- Dheva Dhas
" மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் சென்று விடாதிர்கள்,ஏனென்றால் உங்களின் பாத சுவடுகள் தெரியாமல் போய் விடும் "
- Albert Henry
" எத்தனை துன்பம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல 1000 முறை தோற்றவன் "
- Edison
" எல்லோருக்கும் அன்பை கொடுத்து ஏமாந்து விடாதே !!
யாரிடமும் அன்பை பெற்று ஏமாற்றி விடாதே "
- Vivekananthar
" வாழ்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்,ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார் "
- Alexander
" சொர்க்கத்தில் அடிமையாய் இருப்பதை விட நரகத்தில் அரசனாய் இரு "
- Alexander
" உன்னை யாரும் தோற்கடிக்க முடியாது,உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை "
- Nethaji
" மண்டிஇட்டு வாழ்வதை விட நின்று கொண்டே சாகலாம் "
- Sadam Hussain
சில மொக்கைகள்...சில கவிதைகள( படித்தவை : )
மொக்கை 1 :
ஒரு ஊருல நெறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு.அவர் ஒரு
நாள் வேற ஊருக்கு போனார்,அங்க அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு,அங்க
அவருக்கு பெனட்ரில் (Benadryல்)கொடுத்தாங்க....ஏன்?
ஏன்னா...கற்றவருக்கு சென்ற இடமெல்லம் சிறப்பு (syrubu)
மொக்கை 2 :
லைஃப்ல வெற்றின்னா என்னான்னு தெரியுமா?...
அடை மழை பெய்யும் போது உன் வீட்டு மரம் ஈரமா இருக்குமே அதுதான்
WET TREE...
மொக்கை 3 :
தினந்தோறும் எனது பிரார்த்தனை......
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே...
எனது அம்மவுக்கு மட்டும் ஒரு நல்ல ஃபிகர் மருமகளாக
வர வேண்டும்...அது போதும் எனக்கு...
மொக்கை 4 :
3 G A P A 6 = ? யோசிங்க...
என்ன தெரியலியா?...
இது கூட தெரியாதா?..
விடை : மூஞ்சிய பாரு...
கவிதை 1 :
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
எக்ஸாம் ஹாலில்
என்ன கொடுமை சார்..
கவிதை 2 :
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்!
கவிதை 3 :
ஆசை பட்டதை மறந்து விடாதே...
கவிதை 4 :
ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் அல்ல . . . .
உன்னை போல சாதிக்க துடிக்கும் புதிசாலியை மட்டுமே
என்னை பார்த்து சொன்னார் அப்துல் கலாம்...
கவிதை 5 :
கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன் ...
நீ அணைக்கும் வரை.
இப்படிக்கு மெழுகுவர்த்தி
கவிதை 6 :
நீ உன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
என்னை மறந்து விடுகிறாய்...
இப்படிக்கு கவலைகள்
கவிதை 7 :
நண்பன் மீது கோபம் கொள்ளலாம்..ஆனால் காதலி மீது
கோபம் கொள்ளாதே...ஏன் என்றால்
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்.
...............................................................................................................
யாரு புத்திசாலி .....கலாமா இல்ல ஜார்ஜ் புஷ்ஷா?
ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தப்ப நம்ம குடியரசு தலைவர் கலாமை சந்திக்கிறார் ...
அப்ப கலாம் கிட்ட கேக்குறாரு ...எப்படி நீங்க இவ்ளோ திறமையா மேனாஜ் பண்றீங்க அப்டீன்னு கேட்டாரு ....
அதுக்கு கலாம் ...என்ன சுத்தி எப்பவும் திறமையானவர்களா வச்சிக்கிருவேன்னு சொன்னாரு ,,,,
எப்பிடி அவங்க இண்டேல்லிஜென்ட் அப்டின்னு கண்டு பிடிப்பீங்கன்னு புஷ் கேட்டாரு ...உடனே கலாம் இப்ப பாருங்க அப்டீன்னு மன்மோகன் சிங்குக்கு போன் பண்ணுனாரு ...
போன் பண்ணி கேட்டாரு மிஸ்டர் சிங் ...உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு பையன் ...அவர் உங்க அண்ணனும் இல்ல தம்பியும் இல்ல ...அவர் யாருன்னு கேட்டாரு ....
உடனே சிங் அது நான் தான்னு சொல்லிட்டாரு..
இவ்ளோ தான்னு ....கலாம் சொல்லிட்டாரு ...
உடனே புஷ் ரொம்ப நன்றி ...நானும் இத பின்னாடி யூஸ் பண்ணிக்கிறேன் அப்டின்னுட்டு போய்ட்டாரு ...
அமெரிக்கா வந்த ஒடனே புஷ் , காண்டலிசா (இவங்க அப்போ ஸ்டேட் செகரட்ரி) கிட்ட என்னோட கொஸ்டினுக்கு அன்செர் பண்ணுங்க ....பண்ணிட்டா எனக்கு ரொம்ப சந்தோசம் அப்டின்னாரு ......
அவங்களும் ஒ. கே மிஸ்டர் பிரெசிடென்ட் அப்டின்னு சொல்லிட்டாங்க ..
இவர் அப்டியே கலாம் சொன்ன கேள்விய கேட்டாரு ...அவங்க யோசிச்சுட்டு எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் பதில் சொல்றேன்னு சொல்லிட்டாங்க ..
அவங்களும் ரொம்ப ட்ரை பண்ணிட்டு கடைசில எல்லா செனடர்ஸ் வர சொல்லி ஒரு மீட்டிங் போட்டாங்க ...ஆனா யாருக்கும் பதில் தெரியல ...அப்புறம் அவங்க காலின் பவல் (டிபான்ஸ் ) கிட்ட கேக்குறாங்க ...
உடனே அவர் அது நான் தான்னு கரக்ட்டா சொல்லிட்டாரு ...
உடனே இந்த அம்மாவுக்கு நிம்மதி ...
இவங்க புஷ் கிட்ட போய்...எனக்கு பதில் தெரியும் சார்...அப்டின்னாங்க ...
அவருக்கு ரொம்ப சந்தோசம் ...சொல்லுங்க செனடர் அப்டின்னாரு ..
உடனே இந்த அம்மா அது காலின் பவல் தான் அதுன்னுச்சு ...
அதுக்கு புஷ் ..இல்ல அது தப்பு ...அது வந்து மிஸ்டர் . மன்மோகன் சிங் தான் அப்படின்னாராம் ...
இது அப்புடி இருக்கு ....
EB ல் வேலை வேண்டுமா ?
உங்கள்ள நெறைய பேருக்கு கிர்ச்சாஃப் வோல்டேஜ்,கரண்ட் லா
எல்லாம் தெரிஞ்சுருக்கும்...அப்படி தெரியலன்னா நானே கஷ்டப்பட்டு படிச்ச
அத இங்க எழுதுறேன்...படிச்சுக்கோங்க...அது மட்டும் போதாது..அத படிச்சுட்டு
கீழ இருக்குற சர்க்கியுட்ல அத அப்ளை பண்ணணும் ... பண்ணுங்க
மக்களே...சரியா பதில் சொன்னவங்களுக்கு உடனே E.Bல வேலை..
Kirchoff's Current Law (KCL): At every node, the sum of all currents entering a node must equal zero.
Kirchoff's Voltage Law (KVL):The voltage law says that the sum of voltages around every closed loop in the circuit must equal zero. .
*
*
*
*
*
*
*
*
*
*
* *
* * * *
* * * * * *
* * * * ** * *

முக்கிய குறிப்பு : நோ ரெகமண்டேஷன்....உங்கள் திறமைக்கே
முன்னுரிமை... என்ன யாரும் திட்ட கூடாது
கவனம் தேவை
ஒரு வெர்ட்னரி மருத்துவக்கல்லூரியின் முதலாம் ஆண்டு செய்முறை
வகுப்பு...ஒரு வயதான ப்ரொஃபசர் வகுப்பெடுக்க வந்தார்..அந்த அறையில் ஒரு
டேபிளின் மேல் ஒரு இறந்த பன்றியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
வகுப்பினை ஆரம்பித்த அவர் மாணவர்களிடம் செய்முறை வகுப்பில்
மிக்க கவனம் தேவை..ஒவ்வரு நொடியும் இன்றியமையாதது..அதனை நீங்கள்
தவற விடக் கூடாது..இப்போது நான் என்ன செய்கிறேனோ அதையே நீங்களும்
செய்ய வேண்டும்..மிக்க கவனம் தேவை என்று கூறியவாறே..
தனது ஒரு விரலினை அந்த பன்றியின் வாயில் விட்டு எடுத்து தனது
வாயில் வைத்து சுவைத்தார்..மாணவர்களுக்கு என்ன செய்வதென்று
விளங்கவில்லை..ஆனால் புரொஃபசர் சொல்லி விட்டாரே என்று அவர்களும்
அதே போன்று செய்தனர்..
இதே போன்று அவர் பல முறை செய்ய மாணவர்களும் அதையே
செய்தனர்..இறுதியாக அவர் மாணவர்களிடம் நான் செய்ததை நீங்களும்
செய்தீர்கள் அல்லவா?...என்று கேட்டார்..அவர்களும் ஆமாம் என்றனர்..
அதற்கு அவர் இல்லை நான் செய்தது போன்று நீங்கள் செய்ய வில்லை
என்று கூறினார்..மாணவர்கள் விழிக்க...அவர் தொடர்ந்தார்...நான் பன்றியின்
வாயில் விட்டது ஒரு விரல்...என் வாயில் வைத்தது மற்றொரு விரல்...ஆகவே
நான் முதலில் கூறியபடி மிக்க கவனம் தேவை..என்று முடித்தார்...