ஆன்லைனுக்கும் இந்த மாதிரி பாஸ்வேர்டு இருந்தா
ஆன்லைனுக்கும் இந்த மாதிரி பாஸ்வேர்டு இருந்தா
அமெரிக்காவுல இருந்து ஒருத்தர் இந்தியாவ சுத்திப்பார்க்க
வந்தார்.அவரு ஒரு இந்தியரை கைடா வச்சுக்கிட்டு சுத்திப்பார்க்க
கெளம்புனாரு.மொதல்ல தாஜ்மகாலுக்கு போனாங்க..நம்ம ஆளு நல்லா
எக்ஸ்பிலைன் பண்ணீ சுத்திக்காண்பிச்சார்..அப்புறம் அந்த அமெரிக்கர்
கேட்டாரு இத கட்டி முடிக்க எவ்ளோ நாள் ஆச்சுன்னு..?அதுக்கு நம்ம ஆளு
20 வருஷம் ஆச்சுன்னு சொன்னார்..
உடனே அவ்ரு இருபதுதுதுது.....வருஷமா ஆஆஆஆச்சுன்னு
சொல்லிட்டு(நம்ம என்னத்த கண்ணையா வடிவேலு கிட்ட சொன்ன
மாதிரி )..எங்க ஆமெரிக்காவுலன்னா இந்த தாஜ்மகால 10 வருஷத்தில
கட்டி முடிச்சிருப்பாங்கன்னாரு..
அடுத்த நாள் ராஜஸ்தான்ல இருக்கிற ஹவா மாகாலுக்கு
போனாங்க.அப்பவும் அவரு அதே கேள்வியை கேட்டாரு..நம்ம ஆளு 10
வருஷம் அப்படின்னார்..அதுக்கு அவரு எங்க ஆமெரிக்காவுலன்னா 5
வருஷத்தில கட்டி முடிச்சிருப்பாங்கன்னாரு..
நம்ம ஆளுக்கு புரிஞ்சி போச்சு ...அவரு அமெரிக்கா புத்திய
காட்ட ஆரம்பிச்சிட்டாருன்னு..அடுத்த நாள் குதுப்மினாருக்கு போனாங்க..அந்த
அமெரிக்கர் கொஸ்டீன் கேக்கறதுக்கு முன்னாடியே நம்ம ஆளு
அவருக்கிட்ட..என்னடா ஆச்சரியமா இருக்கு..ரெண்டு நாள் முன்னாடி வந்தப்ப
இந்த கோபுரம் இங்க இல்ல...அதுக்குள்ள கட்டிட்டாங்களா???!!!!!அப்டின்னு
சொல்லிட்டாரு..
இது எப்படி இருக்கு ...
ஜார்ஜ் புஷ்சை சந்திக்க அமெரிக்கா போறாரு மன்மோகன் சிங்...
பாஸ் டு செக்கரெட்ரி : இந்த வாரம் புராஜக்ட் விஷயமா
நாம் அப்ராட் போகணும் சீக்கிரம் அரேஞ்பண்ணு
செக்கரெட்ரி டு ஹ்ஸ்பண்ட் : இந்த வாரம் பாஸ் கூட வேல
விஷயமாஅப்ராட்போரேன்...அதனால நீங்க
வீட்ட மேனேஜ்
பண்ணீக்கோங்க..
ஹ்ஸ்பண்ட் to சீக்ரெட் லவ்வர் : இந்த வாரம் ஃபுல்லா என் மனைவி
வீட்டுல இல்ல..என் வீட்டுக்கு வந்துரு...
சீக்ரெட் லவ்வர் டு ஸ்டுடண்ட் : இந்த வாரம் கொஞ்சம் வேலை
இருக்கு ..அதனால் நீ டியூசன் வர
வேண்டாம்.
..
ஸ்டூடண்ட் டு கிராண்ட் ஃபாதர் : இந்த வாரம் டியூசன் லீவ்..அதனால டூர்
போகலாம்..
கிராண்ட் ஃபாதர்(பாஸ்) டு செக்கரெட்ரி :இந்த வாரம் பெர்ஸ்னல் வேல
இருக்கு..ட்ரிப்ப கேன்ஸல் பண்ணிரு..
செக்கரெட்ரி டு ஹ்ஸ்பண்ட் : ட்ரிப் கேன்ஸல்..நான் வீட்டுக்கு
வந்துருவேன்.
ஹஸ்பண்ட் டு சீக்ரெட்லவ்வர் : ப்ரோக்ராம் கேன்ஸல்..வொயிஃப்
வீட்டுக்கு வந்துருவா..
சீக்ரெட் லவ்வர் டு ஸ்டூடண்ட் :வேலையை முடிச்சுட்டேன்..டியுசன்
இருக்கு..அட்டென் பண்ணு.
ஸ்டூடண்ட் டு கிராண்ட் ஃபாதர் :டியுஸன் உண்டு தாத்தா..டூர்
வேண்டாம்.
கிராண்ட் ஃபாதர்(பாஸ்) டு செக்கரெட்ரி :என்னோட பெர்ஸ்னல் டூரை
கேன்ஸல் பண்ணிட்டேன்..அப்ராடு
போக ரெடி பன்ணு..
என்னவோ பண்ணுங்க ..
சொர்க்கத்துல ரொம்ப போர் அடிச்சதுனால அங்க இருக்குற சைன்டிஸ்ட்
எல்லாரும் சேர்ந்து கண்ணாம்பூச்சி ஆடலாம்னு முடிவு
பண்ணாங்களாம்(வேற விளையாட்டே கெடக்கல போல)...
சாட் பூட் திரி எல்லாம் போட்டு முடிஞ்சப்போ ஐன்ஸ்டீன் தான்
கண்ணபொத்தனும் மத்த எல்லாரும் ஓடிப்போய் ஒழிஞ்சுக்கனும்னு
முடிவாச்சு..
அவரும் கண்ண மூடிட்டு 1,2,3...அப்படின்னு எண்ண ஆரம்பிச்சுட்டார்...
எல்லாரும் போய் ஒழிஞ்சுக்கிட்டாங்க..ஆனா நம்ம நியுட்டன் மட்டும்
அப்படி பண்ணாம ஒரு 1 ஸ்கொயர் மீட்டர்ல ஒரு சதுரம் வரஞ்சுட்டு
அதுக்குள்ள நின்னுக்கிட்டார்.
இபப ஐன்ஸ்டீன் 100 எண்ணிட்டு கண்ண தொறந்து பார்த்தா...கண்ணு
முன்னால நியுட்டன் நின்னுக்கிட்டு இருக்குறாரு..ஐன்ஸ்டீனுக்கு
இருக்க முடியல...ஹேய் நியுட்டன் அவுட்..நியுட்டன் அவுட்டுன்னு கத்த
ஆரம்பிக்கிறார்..
ஆனா நியுட்டன் நான் அவுட் இல்லன்னு ஒத்த கால்ல நிக்கிறார்...மத்த
எல்லரும் வந்து நியுட்டன் அவுட்டுன்னு சொல்றாங்க..
அதுக்கு ஒன்னு சொன்னரு பாருங்க...
நான் இப்போ நிக்கிறது 1 ஸ்கொயர் மீட்டர் அளவுள்ள ஒரு சதுரம்.அதனால
இப்பொ நான் நியுட்டன்/ஸ்கொயர் மீட்டர்..1 நியுட்டன்/ஸ்கொயர் மீட்டர்
அப்டிங்கறது 1 பாஸ்கல்..அதனால நான் இப்போ பாஸ்கல்..அப்ப பாஸ்கல்
தான அவுட்டு அப்படின்னாறாம்.
கீழ இருக்குற மேட்டரை படிச்சுட்டு சொல்லுங்க..
கணவன் மனைவி ரெண்டு பேர் இருந்தாங்க..
ஒரு நாள்,மனைவி வெளிய போய்ட்டு நைட்டு திரும்பி வரவே இல்ல..
அடுத்த நாள் காலைல அவங்க திரும்பி வந்து அவ்ங்க வீட்டுக்காரர்ட்ட
நேத்து லேட் ஆனதுனால என் தோழி வீட்டுலயே தங்கிட்டேன் அப்டீன்னு சொல்லிட்டாங்க...
நம்மாளு உடனே மனைவியோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்
எல்லாத்துக்கும் ஃபோனப் போட்டு விசாரிச்சுட்டான்..எல்லாரும் உங்க
வொய்ஃப் இங்க வரவே இல்லன்னு அரிச்சந்திரி மாதிரி உண்மைய போட்டு
... damaar
ரெண்டு நாள் கழிச்சு நம்ம ஆளு கேர்ள் ஃபிரண்டோட ஊர் சுத்திட்டு நைட்டு
வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுத்துட்டார்...அடுத்த நாள் அம்மணி
கேட்க ஃப்ரண்ட் வீட்டுல தங்கிட்டதா சொல்லிட்டார்..
அம்மணி உடனே எல்லா ஃபிரண்ட்ஸ்க்கும் ஃபோனப் போட்டு விசாரிச்சாங்க..
அதுல மொத 5 பேர் நல்லவங்க போல...ஆமா நேத்து ராத்திரி மச்சான் இங்க
தான் இருந்தான்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க...
அடுத்த 5 பேர் ரொம்ப நல்லவங்க போல...இப்பவும் எங்க கூட தான்
இருக்கான்னு சொல்லிட்டாங்க..
இப்ப தலைப்பை வாசிங்க மக்களே .......
நோட்:பழைய மெயில்ஸ செக் பண்ணப்ப கெடச்சது
மனித உடல் ஒரு இயந்திரம் ஆனால் ஆச்சரியமான,வியப்பூட்டக்கூடிய இயந்திரம்.கீழே உள்ள தகவல்கள் இதனை உறுதிபடுத்தும்
2. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்களின் கரு முட்டை.
3. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆண்களின் உயிரணு.
4. ஒரு ஸ்டெப் நடக்க 200 தசைகள் அசைந்து உதவுகின்றன.
5. சராசரி பெண்ணின் உயரம் சராசரி ஆணின் உயரத்தை விட 5 இன்ச் குறைவு.
6. வயிற்றில் உள்ள அமிலங்கள் ரேசர் பிளேடுகளை கரைக்கக் கூடிய ஆற்றல் உடையவை.
7. மனித மூளையின் செல்லானது பிரிட்டனிகா விகிபீடியாவிலுள்ள தகவல்களைப் போல் 5 மடங்கு அதிகம் சேமிக்கும் திறனுள்ளது.
8. வாயில் இருந்து உணவு வயிற்றை அடைய 7 நிமிடங்களை எடுத்து கொள்கிறது.
9. சராசரி மனிதனின் கனவு 2 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே.
10. செம்பழுப்பு நிற முடி இருப்பவர்களுக்கு கருப்பு நிற முடி இருப்பவர்களை காட்டிலும் அடர்த்தியாக இருக்கும்.
11. பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே குழந்தைக்கு பற்கள் வளர ஆரம்பித்து விடுகின்றன.
12. உடலின் மிகவும் வலிமையான பகுதி பற்களின் எனாமல்.
13. 30 நிமிடங்களில் உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது அரை காலன் தண்ணீரை கொதிக்க வைக்க போதுமானது.
14. காலின் பெருவிரல்கள் இரண்டு எலும்புகளையும் மற்றவை 3 எலும்புகளையும் கொண்டுள்ளன.
15. மார்பில் உரோமம் இல்லாதவர்களின் நுரையீரல்கள் உரோமம் உள்ளவர்களைக் காட்டிலும் அதிகம் என்னும் நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.
16. கட்டை விரலின் நீளமும் உங்கள் மூக்கின் நீளமும் ஒரே அளவாக இருக்கும்.......
.
.
.
.
.
மூக்குல இருந்து கைய எடுத்துட்டு உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு இத சொல்லுங்கப்பா..
பதிவை ஆராயக்கூடாது ..அனுபவிக்கனும்.