இந்தியன் இந்தியந்தான்



அமெரிக்காவுல இருந்து ஒருத்தர் இந்தியாவ சுத்திப்பார்க்க

வந்தார்.அவரு ஒரு இந்தியரை கைடா வச்சுக்கிட்டு சுத்திப்பார்க்க

கெளம்புனாரு.மொதல்ல தாஜ்மகாலுக்கு போனாங்க..நம்ம ஆளு நல்லா

எக்ஸ்பிலைன் பண்ணீ சுத்திக்காண்பிச்சார்..அப்புறம் அந்த அமெரிக்கர்

கேட்டாரு இத கட்டி முடிக்க எவ்ளோ நாள் ஆச்சுன்னு..?அதுக்கு நம்ம ஆளு

20 வருஷம் ஆச்சுன்னு சொன்னார்..

உடனே அவ்ரு இருபதுதுதுது.....வருஷமா ஆஆஆஆச்சுன்னு

சொல்லிட்டு(நம்ம என்னத்த கண்ணையா வடிவேலு கிட்ட சொன்ன

மாதிரி )..எங்க ஆமெரிக்காவுலன்னா இந்த தாஜ்மகால 10 வருஷத்தில

கட்டி முடிச்சிருப்பாங்கன்னாரு..

அடுத்த நாள் ராஜஸ்தான்ல இருக்கிற ஹவா மாகாலுக்கு

போனாங்க.அப்பவும் அவரு அதே கேள்வியை கேட்டாரு..நம்ம ஆளு 10

வருஷம் அப்படின்னார்..அதுக்கு அவரு எங்க ஆமெரிக்காவுலன்னா 5

வருஷத்தில கட்டி முடிச்சிருப்பாங்கன்னாரு..

நம்ம ஆளுக்கு புரிஞ்சி போச்சு ...அவரு அமெரிக்கா புத்திய

காட்ட ஆரம்பிச்சிட்டாருன்னு..அடுத்த நாள் குதுப்மினாருக்கு போனாங்க..அந்த

அமெரிக்கர் கொஸ்டீன் கேக்கறதுக்கு முன்னாடியே நம்ம ஆளு

அவருக்கிட்ட..என்னடா ஆச்சரியமா இருக்கு..ரெண்டு நாள் முன்னாடி வந்தப்ப

இந்த கோபுரம் இங்க இல்ல...அதுக்குள்ள கட்டிட்டாங்களா???!!!!!அப்டின்னு

சொல்லிட்டாரு..

இது எப்படி இருக்கு ...

ஆ(அ)ப்புரைசல்


ஆ(அ)ப்புரைசல் :

ஒருத்தர் கனவுல எமதர்மராஜா வந்து..உனக்கு இன்னும் 10

மாசத்துக்கு எதுவுமே ஆகாது..உன்னோட ஆயுசு கெட்டி..அதானால எங்க

வேணும்னாலும் போ...என்ன வேணும்னாலும் பண்ணு..அப்டின்னுட்டார்...


இவருக்கு ஒரே சந்தோஷம்..இருக்க முடியல..அந்த நிமிஷத்தில்

இருந்து ஊர் சுத்த ஆரம்பிச்சாரு....ஒரே தண்ணியில மெதந்தாரு..அப்படியே

ஊர் சுத்துரப்போ ஆக்ஸிடன்ட் ஆய் டப்புன்னு செத்துபோய்ட்டாரு..


எமலோகம் போனப்புறம்..எமதர்மராஜக்கிட்ட போய் நியாயம் கேட்டாரு

நம்ம ரஜினிகாந்த் கேட்டாப்புல..


அப்ப நம்ம எமதர்மராஜா சொல்றாரு..கோவிச்சுக்காதப்பா..சொல்லாம

கொள்ளாம திடீர்னு அப்புரைசல் போட்டுட்டாங்க..அதான் கொஞ்சம்

அர்ஜண்ட்டா கணக்க முடிக்க வேண்டியதா போச்சு..
.

.
.
.
.
....இது எப்டி இருக்கு

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்...இல்லன்னா?



எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்...இல்லன்னா?


3 பசங்க எக்ஸாமுக்கு முந்துன நாள் நல்லா ஆட்டம் போட்டுட்டு

ஒண்ணுமே படிக்காம எழுத வந்தாங்க...நேரா ஹெட் மாஸ்டர் கிட்ட

போய்..நேத்து ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வரும் போது கார் வழியில

பங்சர் ஆய்டுச்சு சார்..அதனால எங்களால சரியான நேரத்துக்கு வீட்டுக்கு

வந்து படிக்க முடியல சார்..அப்படின்னு கண்ணீர் உட்டானுங்க...அவரும் அத

நம்ம்ம்..பி சரி பசங்களா..உங்க 3 பேருக்கு மட்டும் நாளைக்கு ரி‍எக்ஸாம்

அப்படின்னு சொல்லிட்டாரு..


இவனுங்களுக்கு கொண்டாட்டம் தாங்க முடியல...

அடுத்த நாள்..3 பேரும் எக்ஸாம் எழுத வந்தாங்க..அப்ப ஹெட் மாஸ்டர்

அவங்க கிட்ட ..நீங்க எக்ஸாம் எழுத ஒரு கன்டிசன்..3 பேரும் தனி தனி

ரூம்ல உட்கார்ந்து எழுதனும்,ரெண்டே ரெண்டு கொஸ்டீன் தான்

அப்டீன்னாரு...


ந‌ம்மாளுங்க‌ளுக்கு ஒரே குஷி...ஒ.கே சார் அப்டின்னு கோர‌ஸா

சொன்னாங்க‌..அதே மாதிரி போய் எழுத‌ உட்கார்ந்தாங்க‌...கொஸ்டீன் பேப்ப‌ர‌

வ‌ங்கி பார்த்தா....


அதுல‌ இருந்த‌ கொஸ்டீன்ஸ் இதுதான்..

1. உங்க‌ள் பெய‌ர் :................(2 மார்க்)

2. உங்க‌ள் காரில் எந்த‌ ட‌ய‌ர் ப‌ங்ச‌ர்.........(98 மார்க்)
அ)வலது முன் ட‌ய‌ர்
ஆ)இட‌து முன் ட‌ய‌ர்
இ)வ‌ல‌து பின் ட‌ய‌ர்
ஈ)இட‌து பின் ட‌ய‌ர்
.

.
.

...........இதுக்குதான் எதையுமே பிளன் பண்ணி பண்ணனும்...

இவ்ளோதாங்க..கல்யாணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்



25 வது திருமண நாளை வெற்றிகரமாக கொண்டாடினார்கள்

அந்த தம்பதியர்.அந்த ஊரில் மிகவும்பிரசித்திபெற்றஜோடிகள்..

காரணம்..அவர்களின் ஒற்றுமை..அவர்களது 25 ஆண்டு கால

வாழ்க்கையில் சண்டை போட்டதே இல்லை..

அதுவும் ஒரு காரணம்..ஏன் அதட்டி ஒரு வார்த்தை கூட அந்த

கணவர் பேசியதில்லை..


அந்த ஊர் தொலைக்காட்சியில் இருந்தும்,பத்திரிக்கையில்

இருந்தும் பேட்டி எடுக்க வந்திருந்தனர்.வீடு முழுவதும் மக்கள்

வெள்ளம்.


பேட்டி ஆரம்பித்தது...


ஒரு நிருபர் கேட்டார்...உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின்

rakasiyam என்ன?..எவ்வாறு உங்களால் மனைவி மேல் கோபப் படாமல்

இருக்க முடிந்த்தது?...


அவர் கூறினார்...நானும் என் மனைவியும் திருமணம் முடிந்த உடன்

தேனிலவுக்கு சென்றோம்...


அவள் குதிரை சவாரி செல்ல விரும்பினாள்..இருவரும் ஆளுக்கு ஒரு

குதிரையில் சவாரி சென்றோம்..


என்னுடைய‌ குதிரை அமைதியாக‌ சென்றுகொண்டிருந்த‌து..அவ‌ளுடைய‌து
கொஞ்ச‌ம் ச‌ண்டித்த‌ன‌ம் செய்த‌து..சிறிது தூர‌ம் சென்ற‌தும் அந்த‌ குதிரை

அவ‌ளை கீழே த‌ள்ளிய‌து..எழுந்த‌ அவ‌ள் இது உன‌க்கு முத‌ல் சான்ஸ்

என்று கூறி ம‌றுப‌டியும் ச‌வாரியை ஆர‌ம்பித்தாள்...சிறிது தூர‌ம்

சென்ற‌தும் ம‌றுப‌டியும் அவ‌ளை அது கீழே த‌ள்ளிய‌து..ம‌றுபாடியும் அவ‌ள்
எழுந்து இது உன‌க்கு 2 வ‌து சான்ஸ் அப்ப‌டின்னுட்டு ம‌றுப‌டியும் ச‌வாரி

செய்தாள்..இந்த முறையும் அவ‌ளை அந்த‌ குதிரை கீழே த‌ள்ளிய‌து..

எழுந்த‌ அவ‌ள் அவ‌ளுடைய‌ துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை

சுட்டு விட்டாள்...


என‌க்கு உட‌னே க‌டுமையான‌ கோப‌ம் வ‌ந்து அவ‌ளை நோக்கி "உன‌க்கு

அறிவு இருக்கா?...ஐந்த‌றிவு பிராணியை இப்படியா செய்வ‌து?..உன‌க்கும்

அதற்கும் என்ன‌ வித்தியாச‌ம்...ஏன் இப்ப‌டி மிருக‌ம் போல் ந‌ட‌ந்து

கொள்கிறாய்..என்று திட்டினேன்..



அதற்கு அவ‌ள் இது இன‌க்கு முத‌ல் சான்ஸ் என்று என்னிடம்

கூறினாள்...


இதுதான் எங்க‌ளுடைய‌ இனிமையான‌ திரும‌ண‌ வாழ்க்கையின் ர‌க‌சிய‌ம்

என்று முடித்தார்.



ம்ம்ம்ம்....குழந்தைங்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு..



ம்ம்ம்ம்....குழந்தைங்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு..














;

;

;

;

;

;

;














அது என்ன ஒபாம கையில இருக்கும் போது சமத்தா இருக்குதுங்க‌ ....மெக்கெயின்,புஷ் கையில இருக்கும் போது அழுறாங்க..


















































































.









.









.









.









.









.









.





















































இன்க்ரடிபில் இந்தியா

அமெரிக்காவுல திருடன கண்டு பிடிக்க ஒரு மெஷின்

கண்டுபிடிச்சாங்களாம்..செமையா வொர்க் அவுட் ஆயிடுச்சாம்,,,நெறைய

திருடனுங்க மாட்டிக்கிட்டாங்க...


உடனே எல்லா நாட்டுலயும் இத யூஸ் பண்ண


ஆரம்பிச்சுட்டாங்களாம்..

அது எந்த நாட்டுல எவ்வளவு திருடன்களை புடிச்சதுங்குற


புள்ளிவிவரம்தான் கீழ இருக்கு


படிச்சுக்கோங்க..சிரிக்கப்படாது மக்களே..
.
.
.
.
.
அமெரிக்காவுல 30 நிமிஷத்துல 20 பேரை புடிச்சிருச்சு..


இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 50 பேரை புடிச்சிருச்சு..


ஸ்பெயின்ல‌ 30 நிமிஷத்துல 60 பேரை புடிச்சிருச்சு..


கானாவுல‌ 30 நிமிஷத்துல 600(அடப்பாவிகளா!!) பேரை புடிச்சிருச்சு..



இந்தியாவுல‌ 15 நிமிஷ‌த்துல‌ ............................

..
.
.
.
.
என்ன‌ ஆச்சுன்னு கேட்கிறிங்க‌ளா?...

அந்த‌ மெஷினையே காணோமாம்...

என்ன‌த்த‌ சொல்ல‌...


சிங் இஸ் கிங் மற்றும் சில துணுக்ஸ்

சிங் இஸ் கிங் :




ஜார்ஜ் புஷ்சை சந்திக்க அமெரிக்கா போறாரு மன்மோகன் சிங்...

புஷ் சிங்க கூப்ட்டு..என்கூட வா..எங்க நாட்டுல டெக்னாலஜி எவ்ளோ

மூன்னேறி இருக்குன்னு காண்பிக்கிறேன்னு ஒரு காட்டுக்குள்ளே

கூட்டிக்கிட்டு போறாரு..உள்ள போனப்புறம் சிங் கையில ஒரு மண்வெட்டியக்

குடுத்து தோண்டுங்குறாரு புஷ்.


இன்னைக்கு நாந்தான் மாட்டுனேனா?...அப்டின்னு நெனச்சுட்டு

தோண்ட ஆரம்பிக்கிறாரு சிங்.ஒரு 50 அடி தோண்டுன ஒடனே கொஞ்சம்

வொயர்,ஆண்டனா எல்லம் கெடக்குது..


உடனே புஷ் சொன்னாரு பார்த்தியா..எங்க நாட்டுல 200

வருசத்துக்கு முன்னாடியே டெக்னாலஜி இவ்வளவு டெவெலப் ஆயிருச்சு

அப்டின்னாராம்..சிங்குக்கு அப்பவே கண்ண கெட்ட ஆரம்பிச்சுருச்சு..

ஒடனே வாய்யா எங்க நாட்டுக்குன்னு கையோட இழுத்துட்டு வந்து புஷ்

கையில மண்வெட்டியக் குடுத்து தோண்டுங்குறாரு...

அவரும் தோண்டு தோண்டுறாராம் தோண்டுறாராம் ஒண்ணுமே

சிக்கலியாம்...


கடுப்பாய்ட்டாரு புஷ்..என்னையா ஒன்னத்தையும் காணோம் அப்படின்னார்...

ஒடனே சிங் சொன்னாராம்...நாங்கல்லாம் அப்பவே வொயர்லெஸ் யூஸ்

பண்ண ஆரம்பிச்சுட்டோம்ல அப்படின்னு...


===================================

துணுக்ஸ்:

ஒரு சைனாக்காரன் அமெரிக்காவுல இருக்குற ஒரு பாருக்கு

போனானாம்..அப்போ அங்க நம்ம ஸ்பீல்பெர்க் தண்ணி அடிச்சுட்டு

இருந்தாரு..ஆர்வக் கோளாருல இவரு அவருட்ட போய் ஆட்டோ

கிராஃப் கொடுங்கன்னு கேட்டாரு..


சைனாக்காரன மேலயும் கீழயும் பார்த்துட்டு பளாருன்னு ஒரு அடி

கன்னத்துல விட்டாராம்..பாவம் அவன் அரண்டு போய்,ஏன் சார் என்ன

அடிச்சீங்கன்னு கேட்டன்..அதுக்கு நீங்க தான பியர்ல்ஃஹார்பர்ல குண்டு

போட்டீங்கன்னு சொன்னாரு ஸ்பீல்பெர்க்..


அந்த சைனாக்காரன் அது நாங்க இல்ல ஜப்பான் காரங்க தான் குண்டு

போட்டாங்கன்னு சொல்ல, உடனே அவர் சைனீஸ்,ஜாப்பனீஸ்,தைவானீஸ்

எல்லாரும் எனக்கு ஒன்னுதான்னு சொல்றாரு...

;

;

;

;

;
"பளார்"........

இந்த அடி விழுந்தது ஸ்பீல்பெர்க்கு...அடிச்சது சைனாக்காரன்..


நீ ஏன்டா என்ன அடிச்சன்னு அவரு கேட்க..

உங்களால் தான டைட்டானிக் கவுந்துச்சு..அதனால தான என்

சொந்தக்காரங்க நெறைய பேர் செத்துப் போய்ட்டாங்க அப்டீன்னானாம்..

அதுக்கு அவரு, அட கூமுட்ட அது ஐஸ் பெர்க்ல மோதி கவுந்து

போச்சுடா..எங்களால இல்லன்னு சொன்னாராம்..

அதுக்கு அந்த சைனாக்காரன் சொன்னானாம்..எனக்கு ஸ்பீல்பெர்க்,ஐஸ்

பெர்க்,கார்ல்ஸ்பெர்க் எல்லம் ஒன்னுதான்னு..



இது எப்படி இருக்கு?



இது அவார்டு வாங்குன ஜோக்குப்பா..அதுக்கு வேண்டியாவது சிரிச்சுருங்க‌

=======================================================

கல்யாணம் கட்டிக்கலாமா?..

ஒருத்தன் அவங்க அப்பாட்ட போய்,அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு
இருக்கேன் அப்டீன்னு சொன்னான்..அதுக்கு அவரு

ரொம்பசந்தோஷம்ப்பா..பொண்ணு யாருப்பா அப்டின்னு கேட்டார்.அவனும்

பொண்ணு பேர சொன்னான்.பேரக் கேட்டதும் அப்பா முகம் சோகமா

மாறிடுச்சு..இவன் என்னப்பா பொண்ண உங்களுக்கு புடிக்கலயான்னு

கேட்டான்..அதுக்கு



அவரு அப்படி எல்லாம் இல்ல..ஆனா அவ உனக்கு தங்கச்சி முறை

வரும்டான்னு சொல்லிட்டு இந்த விஷயத்த உங்க அம்மாக்கிட்ட

சொல்லிடாதப்பான்னு கேட்டுக்கிட்டாரு..அவனும் சரின்னுட்டு இன்னொரு

பொண்ண பார்த்துட்டு இந்த பொண்ணு ஓ.கே வான்னு கேட்டான்..இப்பவும்

அவரு அதே பதிலை சொல்றாரு..இதே மாதிரி ஓவ்வரு பொண்ணுக்கும்

சொல்லிட்டே வாராரு..பையன் டென்சன் ஆயி நேர அம்மாட்டப் போய்

போட்டுக் கொடுத்துட்டான்..ஒடனே அம்மா சிரிச்சுக்கிட்டே கவலப் படாதடா

மவனே...அவரு உன் அப்பாவே இல்லன்னு சொன்னாங்களாம்..





என்னவோ பண்ணுங்க ..


பாஸ் டு செக்கரெட்ரி : இந்த வாரம் புராஜக்ட் விஷயமா

நாம் அப்ராட் போகணும் சீக்கிரம் அரேஞ்பண்ணு






செக்கரெட்ரி டு ஹ்ஸ்பண்ட் : இந்த வாரம் பாஸ் கூட வேல

விஷயமாஅப்ராட்போரேன்...அதனால நீங்க

வீட்ட மேனேஜ் பண்ணீக்கோங்க..







ஹ்ஸ்பண்ட் to சீக்ரெட் லவ்வர் : இந்த வாரம் ஃபுல்லா என் மனைவி

வீட்டுல இல்ல..என் வீட்டுக்கு வந்துரு...








சீக்ரெட் லவ்வர் டு ஸ்டுடண்ட் : இந்த வாரம் கொஞ்சம் வேலை

இருக்கு ..அதனால் நீ டியூசன் வர

வேண்டாம்.

..








ஸ்டூடண்ட் டு கிராண்ட் ஃபாதர் : இந்த வாரம் டியூசன் லீவ்..அதனால டூர்

போகலாம்..







கிராண்ட் ஃபாதர்(பாஸ்) டு செக்கரெட்ரி :இந்த வாரம் பெர்ஸ்னல் வேல

இருக்கு..ட்ரிப்ப கேன்ஸல் பண்ணிரு..








செக்கரெட்ரி டு ஹ்ஸ்பண்ட் : ட்ரிப் கேன்ஸல்..நான் வீட்டுக்கு

வந்துருவேன்.







ஹஸ்பண்ட் டு சீக்ரெட்லவ்வர் : ப்ரோக்ராம் கேன்ஸ‌ல்..வொயிஃப்

வீட்டுக்கு வ‌ந்துருவா..






சீக்ரெட் லவ்வர் டு ஸ்டூடண்ட் :வேலையை முடிச்சுட்டேன்..டியுச‌ன்

இருக்கு..அட்டென் ப‌ண்ணு.







ஸ்டூடண்ட் டு கிராண்ட் ஃபாதர் :டியுஸன் உண்டு தாத்தா..டூர்

வேண்டாம்.







கிராண்ட் ஃபாதர்(பாஸ்) டு செக்கரெட்ரி :என்னோட‌ பெர்ஸ்ன‌ல் டூரை

கேன்ஸ‌ல் ப‌ண்ணிட்டேன்..அப்ராடு

போக‌ ரெடி ப‌ன்ணு..

என்னவோ பண்ணுங்க ..

என்ன ஒரு புத்திசாலித்தனம்.....


சொர்க்கத்துல ரொம்ப போர் அடிச்சதுனால அங்க இருக்குற சைன்டிஸ்ட்


எல்லாரும் சேர்ந்து கண்ணாம்பூச்சி ஆடலாம்னு முடிவு


பண்ணாங்களாம்(வேற விளையாட்டே கெடக்கல போல)...



சாட் பூட் திரி எல்லாம் போட்டு முடிஞ்சப்போ ஐன்ஸ்டீன் தான்


கண்ணபொத்தனும் மத்த எல்லாரும் ஓடிப்போய் ஒழிஞ்சுக்கனும்னு


முடிவாச்சு..



அவரும் கண்ண மூடிட்டு 1,2,3...அப்படின்னு எண்ண ஆரம்பிச்சுட்டார்...



எல்லாரும் போய் ஒழிஞ்சுக்கிட்டாங்க..ஆனா நம்ம நியுட்டன் மட்டும்


அப்படி பண்ணாம ஒரு 1 ஸ்கொயர் மீட்டர்ல ஒரு சதுரம் வரஞ்சுட்டு


அதுக்குள்ள நின்னுக்கிட்டார்.



இபப ஐன்ஸ்டீன் 100 எண்ணிட்டு கண்ண தொறந்து பார்த்தா...கண்ணு


முன்னால நியுட்டன் நின்னுக்கிட்டு இருக்குறாரு..ஐன்ஸ்டீனுக்கு


இருக்க முடியல...ஹேய் நியுட்டன் அவுட்..நியுட்டன் அவுட்டுன்னு கத்த


ஆரம்பிக்கிறார்..



ஆனா நியுட்டன் நான் அவுட் இல்லன்னு ஒத்த கால்ல நிக்கிறார்...மத்த


எல்லரும் வந்து நியுட்டன் அவுட்டுன்னு சொல்றாங்க..



அதுக்கு ஒன்னு சொன்னரு பாருங்க...



நான் இப்போ நிக்கிறது 1 ஸ்கொயர் மீட்டர் அளவுள்ள ஒரு சதுரம்.அதனால

இப்பொ நான் நியுட்டன்/ஸ்கொயர் மீட்டர்..1 நியுட்டன்/ஸ்கொயர் மீட்டர்

அப்டிங்கறது 1 பாஸ்கல்..அதனால நான் இப்போ பாஸ்கல்..அப்ப பாஸ்கல்

தான அவுட்டு அப்படின்னாறாம்.


ஆண்களின் நண்பர்கள் சிறந்தவர்களா? பெண்களின் நண்பர்கள் சிறந்தவர்களா?

கீழ இருக்குற‌ மேட்டரை படிச்சுட்டு சொல்லுங்க..




கணவன் மனைவி ரெண்டு பேர் இருந்தாங்க..


ஒரு நாள்,மனைவி வெளிய போய்ட்டு நைட்டு திரும்பி வரவே இல்ல..



அடுத்த நாள் காலைல அவங்க திரும்பி வந்து அவ்ங்க வீட்டுக்காரர்ட்ட



நேத்து லேட் ஆனதுனால என் தோழி வீட்டுலயே தங்கிட்டேன் அப்டீன்னு சொல்லிட்டாங்க...




நம்மாளு உடனே மனைவியோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்



எல்லாத்துக்கும் ஃபோனப் போட்டு விசாரிச்சுட்டான்..எல்லாரும் உங்க



வொய்ஃப் இங்க வரவே இல்லன்னு அரிச்சந்திரி மாதிரி உண்மைய போட்டு



... damaar




ரெண்டு நாள் கழிச்சு நம்ம ஆளு கேர்ள் ஃபிரண்டோட ஊர் சுத்திட்டு நைட்டு

வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுத்துட்டார்...அடுத்த நாள் அம்மணி


கேட்க ஃப்ரண்ட் வீட்டுல தங்கிட்டதா சொல்லிட்டார்..



அம்மணி உடனே எல்லா ஃபிரண்ட்ஸ்க்கும் ஃபோனப் போட்டு விசாரிச்சாங்க..



அதுல மொத 5 பேர் நல்லவங்க போல...ஆமா நேத்து ராத்திரி மச்சான் இங்க



தான் இருந்தான்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க...




அடுத்த 5 பேர் ரொம்ப நல்லவங்க போல...இப்பவும் எங்க கூட தான்



இருக்கான்னு சொல்லிட்டாங்க..





இப்ப தலைப்பை வாசிங்க மக்களே .......






நோட்:பழைய மெயில்ஸ செக் பண்ணப்ப கெடச்சது

சில சுவாரசியமான,உபயோகமான் தகவல்கள்

மனித உடல் ஒரு இயந்திரம் ஆனால் ஆச்சரியமான,வியப்பூட்டக்கூடிய இயந்திரம்.கீழே உள்ள தகவல்கள் இதனை உறுதிபடுத்தும்


1. I.Q அதிகம் உள்ளவர்களுக்கு கனவுகள் அதிகம் வரும்


2. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்களின் கரு முட்டை.


3. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆண்களின் உயிரணு.


4. ஒரு ஸ்டெப் நடக்க 200 தசைகள் அசைந்து உதவுகின்றன.


5. சராசரி பெண்ணின் உயரம் சராசரி ஆணின் உயரத்தை விட 5 இன்ச் குறைவு.


6. வயிற்றில் உள்ள அமிலங்கள் ரேசர் பிளேடுகளை கரைக்கக் கூடிய ஆற்றல் உடையவை.


7. மனித மூளையின் செல்லானது பிரிட்டனிகா விகிபீடியாவிலுள்ள தகவல்களைப் போல் 5 மடங்கு அதிகம் சேமிக்கும் திறனுள்ளது.


8. வாயில் இருந்து உணவு வ‌யிற்றை அடைய‌ 7 நிமிட‌ங்க‌ளை எடுத்து கொள்கிறது.


9. ச‌ராச‌ரி ம‌னித‌னின் க‌ன‌வு 2 முத‌ல் 3 நிமிட‌ங்க‌ள் வ‌ரை ம‌ட்டுமே.


10. செம்ப‌ழுப்பு நிற‌ முடி இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு க‌ருப்பு நிற‌ முடி இருப்ப‌வ‌ர்க‌ளை காட்டிலும் அட‌ர்த்தியாக‌ இருக்கும்.


11. பிற‌ப்ப‌த‌ற்கு 6 மாதங்க‌ளுக்கு முன்பே குழ‌ந்தைக்கு ப‌ற்க‌ள் வ‌ள‌ர‌ ஆரம்பித்து விடுகின்ற‌ன‌.
12. உட‌லின் மிக‌வும் வ‌லிமையான‌ ப‌குதி ப‌ற்க‌ளின் எனாம‌ல்.


13. 30 நிமிட‌ங்க‌ளில் உட‌லில் இருந்து வெளியேறும் வெப்ப‌மான‌து அரை காலன் த‌ண்ணீரை கொதிக்க‌ வைக்க‌ போதுமான‌து.


14. காலின் பெருவிர‌ல்க‌ள் இர‌ண்டு எலும்புக‌ளையும் ம‌ற்ற‌வை 3 எலும்புகளையும் கொண்டுள்ள‌ன‌.


15. மார்பில் உரோம‌ம் இல்லாத‌வ‌ர்க‌ளின் நுரையீர‌ல்க‌ள் உரோம‌ம் உள்ளவ‌ர்க‌ளைக் காட்டிலும் அதிக‌ம் என்னும் நோயினால் பாதிக்க‌ப் படுகின்ற‌ன‌ர்.


16. க‌ட்டை விர‌லின் நீள‌மும் உங்க‌ள் மூக்கின் நீள‌மும் ஒரே அள‌வாக‌ இருக்கும்.......

.

.

.

.

.

மூக்குல‌ இருந்து கைய‌ எடுத்துட்டு உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌வ‌ங்க‌ளுக்கு இத‌ சொல்லுங்க‌ப்பா..


ப‌திவை ஆராய‌க்கூடாது ..அனுப‌விக்க‌னும்.